விஷேட தேவையுடையோர் பாடசாலையினை JDIK பொறுப்பேற்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் சுமார் பத்து வருட காலமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின் நிர்வாக செயட்பாட்டின்கீழ் இயங்கி வருகின்ற விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையினை இன்று 11.02.2017ம் திகதி கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டது.

 இதன் போது புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது. தலைவராக சட்டத்தரணி ஹபீப் ரிபான் தெரிவு செய்யப் பட்டதோடு, உப தலைவராக தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனியும் செயலாளராக வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி தெரிவு செய்யப்பட்டார்.

 பொருளாளராக எம்.பீ.எம். ஜஃபர் தெரிவு செய்யப்பட்டதோடு உறுப்பினர்களாக ஏ.கே.எம்.சர்ஜூன், மௌலவி ஏ.எல்.முஸ்தபா சலாமி ஏ.எல்.பதுர்தீன் ஸஹ்வி, மற்றும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபர் ஏ.ஹபீப் காஸிமி, ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக், சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நசீர், ஆசிரியர் ஏ.எம்.எம். உவைஸ் ஆகியோர்கள் ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் முன்நிலையில் தெரிவுசெய்யப்பட்டனர். 

இந் நிகழ்வுக்கு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.பீர்முஹம்மட் காசிமி உட்பட பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -