கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் KPS ஹமீட் நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் KPS ஹமீட் கெளரவ கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர் அஹமட் அவர்களினால் நேற்று மாலை நியமிக்கப்பட்டுள்ளார்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவருமான ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பரந்த சேவைகளினாலும், துடிப்பான சமூகத்துக்கான சிறந்த நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

 குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், வீடமைப்புத் அதிகாரசபை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ பாயிஸ் மற்றும் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.கபூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -