ஓட்டு மொத்த திமுக உறுப்பினர்களும், ஒரு முடிவோடு தான் சட்டமன்ற அவைக்கு வந்து இருக்கின்றனர். துரைமுருகனின் திட்டமிட்ட அட்டவணையோடு, ஸ்டாலினின் உத்தரவை பெற்று, (wel planed) முடிவோடு வந்துவிட்டனர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
காரணம், ஓ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டால், அடுத்த வாய்ப்பு தேர்தலின் மூலம் தங்களுக்கே கிடைக்கும் என்ற கணக்குதான்.
ஜெயலலிதா இருந்தவரை, பெட்டி பாம்பாக அடங்கி இருந்த திமுகவினர், தற்போது ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றனர். கூச்சல் குழப்பம் ஏற்பட்ட உடனே, சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் எம்எல்ஏ பெரிய கருப்பன், மேஜை மீது ஏறி, வேட்டியை மடித்து கட்டி, சபாநாயகரை பார்த்து கூச்சல் எழுப்பினார்.
அதை தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரான பூங்கோதை ஆலடி அருணாவும், மேஜை மீது ஏறி நின்றுவிட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற உறுப்பினர்கள் எல்லாம், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, சில மைக்குகளை உடைத்து, அமளி துமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி நிலையை பார்த்த ச்சிகலா தரப்பு எம்எல்ஏக்கள், செய்வதறியாது விழிபிதுங்கி, முழித்து வருகின்றனர்.
இந்திய ஊடகம்.