முஸ்லிம் கட்சிகள் தடம்மாறிப் பயணிக்கின்றன - இம்ரான் MP

ஊடகப்பிரிவு-
முஸ்லிம் உரிமைகளை வென்றெடுக்கவெனப் புறப்பட்ட முஸ்லிம் கட்சிகள் இன்று தடம்மாறிப் பயணிக்கின்றன கடந்த பல வருடங்களாக அம்பாறை முஸ்லிம்களை தேசிய கட்சிகளும் கைவிட்டமையால் முஸ்லிம்கள் இன்று நட்டாற்றில் தவிக்க விடப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஐக்கியதேசிய கட்சியின் கிழக்குமாகாண தமிழ் முஸ்லிம் பிரதேச அமைப்பாளராக நியமிக்கபட்டத்தை அடுத்து சனிக்கிழமை சம்மாந்துறைப் பிரதேச ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே இம்ரான் MP மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஹசன் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் எதிர்வரும் காலங்களில் அம்பாறையில் நாம் இழந்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பெறமுடியும். நான் இன்று காலை முதல் அம்பாறையின் பல பகுதிகளிலுக்கும் சென்று இங்குள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தேன் இங்குள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் குறுப்பிட ஒரு கருத்து எங்கள் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் அம்பாறையில் நாங்கள் இன்னமும் எதிர் கட்சியாகவே உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வருவதால் காலம் காலமாக அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டு வந்த எமது அவலங்கள் எமது அரசு ஆட்சி அமைத்தும் தொடர்கிறது ஆகவே எமக்கும் இங்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்று தாருங்கள் என என்னிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.

உண்மையில் கிழக்கு மாகாணம் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்பட்ட ஒரு பகுதி 1989 வரை அம்பாறை முஸ்லிம் பகுதிகளை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி செய்தது எமது அன்றைய ஜனாதிபதி முஸ்லிம் கட்சி ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இன்று எமது கட்சிக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளது அதுவும் முன்னாள் ஜனாதிபது பிரேமதாச இறந்த பின் தொடர்ச்சியாக எதிர்கட்சியில் இருந்ததால் எமது கட்சியினால் இங்கு எமது இருப்பை உறுதி செய்து கொள்ள முடியாமல் போனது ஒருவேளை தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால் எமது இருப்பை பாதுகாத்திருக்க முடியும்.

இந்நிலைமைகளை போக்கி மீண்டும் கிழக்கும் மாகணத்தில் ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்ப எமது கட்சி தீர்மானித்துள்ளது இதற்கான பாரிய பொறுப்பு கட்சி தலைமையால் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. பிதமர் மற்றும் கட்சியின் செயலாளரின் வழிகாட்டலில் கட்சியை மீள கட்டி எழுப்புவதற்கான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் அமைப்பாளர்களை நியமித்து அவர்களின் கீழ் அப்பிரதேச செயற்குழுக்கள் அமைக்கப்படும். இச் செயற்குழுக்கள் மூலமாக எமது கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் எதிர்வரும் தேர்தல்களின் ஒன்றல்ல இரண்டள்ள மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும்.

இன்று இங்கு காணப்படும் முஸ்லிம் கட்சிகளின் பிரச்சினை என்ன என்றுபார்த்தல் எந்த ஊருக்கு தேசிய பட்டியல் வழங்குவது யாருக்கு அமைச்சின் இணைப்பாளர் பதவி வழங்குவது யாருக்கு ஒப்பானத வேலைகளை வழங்குவது என்பனவே இதுவா முஸ்லிம்களின் பிரச்சினை இதுவா எமது சமூகத்தின் பிரச்சினை. ஆகவே எமது சமூகத்தின் பிரட்சினைகளை பேசுவதற்கு இனிமேலும் இனங்களை பிரதிநித்துவ படுத்தும் கட்சிகளால் முடியாது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர் எமது சமூகத்தின் பிரட்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க இன மத பேதமற்ற எமது கட்சியினால் மட்டுமே முடியும்.

இன்று நல்லாட்சியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன தபால் வாக்களிப்பின் பின் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தவர்களும் இன்று அமைச்சர்களாக உள்ளனர் ஏன் பாராளுமன்ற தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவளித்தவர்களும் இன்று அமைச்சர்களாக உள்ளனர் அண்மையில் மகிந்த ராஜபக்சவால் அரசுக்கெதிராக ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டத்துக்கு வாகனகளை அனுப்பிய அமைச்சர்களும் உள்ளனர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய நாம் இன்னும் அதை அனுபவிக்கவில்லை இதை நிவர்த்தி செய்வதற்காக எமது தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார் இப்பிரதேசத்தில் உள்ள இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள எமது தலைவரின் வழிகாட்டலில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நீங்கள் அதன் மூலம் ஆட்சி மாற்றத்தின் பயனை அடைவீர்கள் 1989 இல்எமது கட்சி காணப்பட்டதை விட பலமிக்கதாக மீள் எழுச்சி பெறும் என்றார்.

சனிக்கிழமை நிந்தவூர் சம்மாந்துறை கல்முனை மருதமுனை உள்ளிட்ட அம்பாறை மாவட்ட பல பகுதிகளுக்கும் சென்ற இம்ரான் MP பல மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டமை குறுப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -