ஏறாவூர் பிரதேசத்தில் புதிய பாடசாலை அமைக்க கல்வி அமைச்சர் உறுதி - சுபையிர் MPC

எம்.ஜே.எம்.சஜீத்-
றாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்றை அமைக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபையில் கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (21) தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:

கடந்த 1985ஆம் ஆண்டு ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் கால காலமாக வாழ்ந்து வந்த மீனவ சமூகம் பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டு அவர்கள் தென்பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் அக்குடும்பத்தினர் ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது அங்கு குடியேறி வாழும் அக்குடும்பத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பாடசாலை ஒன்று இல்லாத பெரும் குறைபாடு சுமார் ஒரு வருட காலமாக இருந்து வருகின்றது. ஆகவே இச் சிறார்களின் எதிர்காலத்தினை கவனத்தில் கொண்டு அவர்களின் கல்வி தொடர்பில் கவனம் செலுத்தி பதிய பாடசாலையொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அப்பிரதேசத்தில் பாடசாலையொன்றை அவரமாக அமைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குள் உட்படுத்துமாறும் கல்வி அமைச்சரிடம் மாகாண சபை உறுப்பினர் சுபைர் கேட்டுக் கொண்டார்.

இதன் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி; குறித்த புன்னக்குடா பிரதேசத்தில் மிகவிரைவில் பாடசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -