"பேராளர் மாநாட்டில் தலைமையின் கரங்களை பலப்படுத்திய போராளிகள்"

Rauff Hakeem - Leader Of Srilanka Muslim Congress அமைச்சர் ரவூப் ஹக்கீம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸின் தலைவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27வது பேராளர் மாநாடு கடந்த 12ம் திகதி பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பேராளர்களின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப் பட்டு முக்கியமான பல தீர்மானங்களுடனும் நிறைவடைந்தது.

இந்த பேராளர் மாநாடானது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டு வந்த பல முரண்பாடுகளுக்கும், தலைமைக்கு எதிரான செயற்பாடுகளுக்கும், இந்த மக்கள் பேரியக்கத்தை அழிக்க துடிக்கும் எதிரிகளுக்கும் முற்றுப் புள்ளிவைப்பதற்காகவும், தலைமையை பலப்படுத்துவதையும் மையப்படுத்தியே அமைந்திருந்தது. 

அந்த வகையில் கட்சியின் யாப்பு திருத்தமும் முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்தது. யாப்பு திருத்தம் தொடர்பாக கடந்த பேராளர் மாநாட்டில் பல்வேறு சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டதால் இம் முறை பேராளர்கள் தெளிவாக விளங்குவதற்கு திருத்த யோசனைகளை தலைமையால் எல்லோரும் நன்கு விளங்கும் வன்னம் இரு மொழிகளிலும் வாசிக்கப் பட்டு இந்த திருத்தங்கள் எதற்காக யாப்பில் கொண்டுவரப் படுகின்றது என்பதையும் பேராளர்களுக்கு தெளிவு படுத்தி பேராளர்களின் அங்கீகாரத்தோடு யாப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

பேராளர் மாநாட்டில் தலைவரின் உரை முக்கியத்துவமிக்க உரையாகவும் காணப்பட்டது அந்த உரையில் முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சவால்கள் அதனை வெற்றி கொள்வதற்காக இந்த கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பேரியக்கத்தை மௌனிக்க வைப்பதற்காக முன்னெடுக்கப்படும் சதிகள்அந்த சதிகளுக்கு துணை போய்க் கொண்டிருப்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது உரையில் தலைவர் சுட்டிக் காட்டினார்.

கட்சிக்குள்ளிருக்கும் சில முக்கிய புள்ளிகளின் அன்மைப் காலப் போக்குகள் கட்சிக்கும் தலைமைக்கும் பெரும் சவாலாக இருந்து வருதை நாம் அறிந்ததே அதை இப் பேராளர் மாநாட்டின் ஊடாக போராளிகள் நீக்கியுள்ளார்கள். இனியாவது கட்சி செயற்பாடுகளை உத்வேகத்துடனும், சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்ற இதய சுத்தியுடனும் போராடவேண்டும் என்பதே அநேகரின் அவாவாகவுள்ளது. 

அதே போல் நடப்பு ஆண்டிற்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை உணர்ந்து பொருப்புணர்ச்சியோடு நேர்த்தியாக தனது செய்து முடிக்கவேண்டும் என்பதோடு நேர்த்தியாக தங்களது பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் தொடர்பில் தலைமை கவனம் செலுத்த வேண்டும் அவ்வாரானவர்கள் அப் பொறுப்புக்களில் இருந்து அகற்றி புதியவர்களை தலைமை நியமிக்க வேண்டும். 

அத் தோடு கட்சியை புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான நகர்வுகளையும், கட்சியை மெம்மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கான செயற்திட்டங்களையும் தலைமை முன்னெடுக்கவேண்டும். 

கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருக்கே உண்டு.அந்த வகையில் அவைகளுக்கான செயற் திட்டங்களை செயளாளர் உருவாக்கி முன்னெடுக்கவேண்டும். அதே போல் இந்த கட்சியை கட்டி எழுப்பும் இன்னுமோரு பொருப்பு கட்சியின் தேசிய அமைப்பாளர்களுக்கும் உண்டு. அந்த வகையில் அவர்களும் கட்சியின் கட்டமைப்புக்களை சீர் செய்து புதிய அங்கத்தவர்களை கட்சியுடன் இணைத்து கட்சி கட்டமைப்புகளை பிராந்திய ரீதியாக சீர் செய்யவேண்டும். 

அதற்கான வேலைத் திட்டங்களை நாடு தழுவிய ரீதியிலும் முன்னெடுக்க வேண்டும் அதே போல் கட்சியின் அதிகாரமிக்க ஏனைய பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளவர்களும் கட்சியின் வளர்ச்சியிலும், சமூக சேவையிலும் கரிசனையுடன் செயற்பட வேண்டும். மாறாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்சி ரீதியான பதவிகளை கௌரவ பதவிகளாக என்னி பெயருக்கு மட்டும் அதனை பயன்படுத்தாதீர்கள். என கட்சியின் போராளி என்ற வகையில் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அவ்வாறு உங்களால் முடியாவிட்டால் பெறும் மனதுடன் உங்கள் பதவிகளை கட்சியின் ஏனைய போராளிகளுக்கு கையளித்து விட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்யுங்கள். கடந்த காலங்களில் இப் பொறுப்புகளை எடுத்தவர்கள் சரியாக செய்யவில்லை இவ்வருடமும் உங்களிடம் அதே பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும் வேளையில் இனியாவது சிறப்பாக அவைகளை முன்னெடுங்கள் போராளிகள் அதற்கு ஒத்துழைப்பு தர முன்வருவார்கள். இவைகள் தொடர்பில் தலைமையும் கண்டிப்பாக நடந்து கொள்ளவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

எம்.என்.எம். யஸீர் அறபாத். 
 ஓட்டமாவடி (கல்குடா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -