SLMC கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம்





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27வது பேராளர் மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பேராளர்கள் நாட்டின் சகல பாகங்களில் இருந்து வந்து கலந்து கொண்டிருந்தனர்.

இம்மாட்டின்போது 2017 யின் நடப்பு வருடத்துக்காக கீழ் குறிப்பிடப்படும் பதவிகள் அறிவிக்கப்பட்டு பேராளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன:
 
தலைவர் - ரவூப் ஹக்கீம் 
தவிசாளர் – ஹஸன் அலி..! 
சிரேஷ்ட பிரதித் தலைவர் - ஏ.எல்.ஏ.மஜீத் 
பிரதித் தலைவர் 1 – ராவுத்தர் நெய்னா முஹம்மத் 
பிரதித் தலைவர் 2 - ஹாபிஸ் நசீர் அஹமட் 
பிரதித் தலைவர் 3 – யூ.டி.எம்.அன்வர் 
பிரதித் தலைவர் 4 – எச்.எம்.எம்.ஹரீஸ் 
பொதுச் செயலாளர் - மன்சூர் ஏ. காதர் 
பொருளாளர் – எம்.எஸ்.எம்.அஸ்லம் 
மஜ்லிஸுல் ஷரா தலைவர் – ஏ.எல்.எம்.கலீல் மௌலவி 
தேசிய ஒருங்கிணைப்பாளர் – ஏ.எம்.மன்சூர் 
கொள்கை பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம்.முபீன் 
தேசிய அமைப்பாளர் – சபீக் ராஜாப்தீன் 
சர்வதேச விவகார பணிப்பாளர் – ஏ.எம்.பாயிஸ் 
யாப்பு விவகார பணிப்பாளர் – எம்.பி.பாரூக் 
இணக்கப்பாட்டு வாரியம் - எம்.எஸ்.தௌபீக்உ
லமா காங்கிரஸ் - எச்.எம்.எம். இஸ்யாஸ் மௌலவி 
அரசியல் விவகார பணிப்பாளர் – எஸ்.எம்.ஏ.கபூர்
பிரதித் தவிசாளர் – எம்.நயிமுல்லாஹ் 
பிரதிச் செயலாளர் – நிசாம் காரியப்பர் 
பிரதிப் பொருளாளர் – கே.எம்.ஏ.ஜவாத் 
மஜ்லிஸுல் ஷரா பிரதித் தலைவர் - சியாத் ஹமீட் 
பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் – ரஹ்மத் மன்சூர் 
பிரதி தேசிய அமைப்பாளர் – பைசால் காசீம் 
மேலதிக கொள்கை பரப்புச் செயலாளர் – அலிசாஹிர் மௌலானா செயற்குழு செயலாளர் – றிஸ்வி ஜவகர்ஷா 
போராளர் மாநாட்டு செயலாளர் – ஐ.எல்.எம்.மாஹீர் 
மஜ்லிஸுல் ஷுரா செயலாளர் – யூ.எம்.வாஹீட். 

முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் பதவி நீக்கப்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலியின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹஸன் அலி தவிசாளர் பதவியை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் விரைவில் தவிசாளர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பேராளர் மாநாட்டின் தீர்மானத்தின்படி கடந்த வருடம் நியமிக்கப்பட்ட 5 செயலாளர் பதவிகள் விலக்கப் பட்டதுடன் செயலாளருடனும் பொருளாளருடனும் இணைந்து அழைக்கப்பட்ட நாயகம் எனும் பிரயோகம் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த முறை இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஐவரும் இம்முறை இணைப்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -