எம்.வை.அமீர்-
சர்வதேச தரத்துடன் கடல்கடந்த, பிரபல்யமான நிறுவனம் ஒன்றின் பிரதான அனுசரணையுடன் பிரமிக்கத்தக்க பரிசுகளுடன் சாய்ந்தமருது வொலிவரியன் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14வரை இடம்பெறவுள்ள ‘ஸ்பீட் T20 சுற்றுப்போட்டி’ என்ற பெயரில், கிழக்குமாகாணத்தில் பிரபல்யமிக்க 32 அணிகள் 8குழுக்களாக பிரிந்து சாய்ந்தமருது ஹோலி ஹிரோஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள சுற்றுப்போட்டி தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பும் ஏனைய கழக உயர்மட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பும் சாய்ந்தமருது சீ பிறீஸ் வரவேற்பு மண்டபத்தில் 2017-02-19 ஆம் திகதி இடம்பெற்றது.
ஹோலி ஹிரோஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.ஆதம்பாவாவின் பிரதானத்துடனும் அந்த கழகத்தின் ஸ்தாபக செயலாளர் அலியார் பைசரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கஸானா விளையாட்டுக்கழகத்தின் முகாமைத்துவப்பணிப்பாளரும் இணை அனுசரணையாளருமான அல் ஹாஜ் எம்.அஸ்கர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இன நல்லுறவை வலியுறுத்தும் வகையில் இடம்பெறவுள்ள குறித்த சுற்றுப்போட்டியில் சர்வதேச தரத்திலான நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் வெற்றிபெறும் சிறந்த வீரர்களில் ஐவருக்கு இராணுவ விளையாட்டு அணியில் இணைந்து விளையாட சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாகவும் இன்னும் சிலர் இந்தியாவுக்கான சுற்றுலா பயணம் செல்ல இலவச வசதிகள் கிடைக்கவுள்ளதாகவும் இங்குள்ள வீரர்களின் திறமையானவர்களை தேசிய சர்வதேச அணிகளுக்கு அறிமுகம் செய்து இப்பிராந்திய வீரர்களின் திறமையை சர்வதேசமயப்படுத்தவுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.