காத்தான்குடியில் டெங்கு அபாயம் - 09 வயது சிறுமி மரணம்

ஜுனைட்.எம்.பஹ்த்-
ற்போது கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 17.03.2017 நேற்று இரவு டெங்கு காய்சலினால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. புதிய காத்தான்குடி நூரானியா மைய்யவாடி வீதியை சேர்ந்த எம்.ஜெ.பாத்திமா ஹஸீதா (09) எனும் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மரணமடைந்துள்ளார்..

இது தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸ்ரூத்தின் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

காத்தான்குடி சுகாதார பிரிவில் டெங்கினால் ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இதுவாகும். இன்னும் சுமார் 40 மேற்பட்ட டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளனர். புதிய காத்தான்குடி பிரதேசத்திலே அதிக டெங்கு நுளம்பு தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.. இது தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகள் எமது சுகாதார பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

அத்துடன் பொதுமக்களும் தங்களது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -