க.கிஷாந்தன்-
டிக்கோயா ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 150 பாடசாலைகளின் வாசிகசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 25.03.2017 அன்று அட்டன் இந்துமகா சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நூல்கள் மலையக மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கிலே இலவசமாக வழங்கப்பட்டதாக ரொட்டரி கழகத்தினர் தெரிவித்தனர்.
டிக்கோயா ரொட்டரி கழகத்தினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு கொழும்பு ஜெயா புத்தக சாலையும், ஸ்ரீ இராமாகிருஷ்ண மிஷனும் அனுசரனை வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் ஸ்ரீ இராமாகிருஷ்ண மிஷனின் தலைவர் சர்வரூபாநந்த மகராஜ், டிக்கோயா ரொட்டரி கழகத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்களும், அட்டன் கல்வி வலய அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.