நியமனம் கையில் கிடைக்கும்வரை எமது போராட்டத்தை கைவிடோம்! காரைதீவில் 17வது நாள் போராட்டம்


காரைதீவு நிருபர் சகா-

கிழக்குமாகாண முதலமைச்சர் ஒருவகையான தரவுடன் 4703 வெற்றிடங்களையும் நிரப்புவதாகத்தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ஆக 2000பேரளவில்தான் உள்வாங்க வெற்றிடமுள்ளதாகத்தெரிவித்திருக்கறார். எது எப்படியிருப்பினும் எமது கைளளில் நியமனக்கடிதங்கள் கிடைக்கும்வரை எமது போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.

இவ்வாறு அம்பாறை மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் நேற்று புதன்கிழமை 17வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் சார்பில் பட்டதாரி கே.சுரேஸ் கருத்துரைத்தார்.

காரைதீவில் 17வது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று 17வது நாள் புதன்கிழமை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்திலீடுபட்டனர்.

பட்டதாரி சுரேஸ் மேலும் கருத்துரைக்கையில்:
கிழக்கு மாகாணத்தில் தொழில் இல்லாமல் தமிழ்சிங்களபட்டதாரிகள் 5500பேரளவில் இருக்கின்றோம். தமிழ்முஸ்லிம் பட்டதாரிகள் 4500பேருள்ளோம்.

இங்கு பிரச்சினை என்னவென்றால் 2012 மற்றும் 2013 களில் பட்டதாரியாக வெளியேறியோருக்கு தற்போது தொழில் வழங்குவோம். பின்னர் படிப்படியாக ஏனையோருக்கும் வழங்குவோம் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டதாகத் தெகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை முற்றாக எதிர்க்கின்றோம். தருவதனால் அனைவருக்கும் தாருங்கள்.எமக்கு பயிற்சி அடிப்படையிலாவது அனைவருக்கும் தொழில் தரவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

கல்விப்புலத்தில் ஆக 1500 தமிழ்மொழி முலபட்டதாரிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஏனைய விவசாயம் சுகாதாரம் போன்ற துறைகளில் 700 வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இந்நிலையில் எப்படி 5500பேருக்கு தொழில் தருவதாக முதலமைச்சர் கூறுவார்?

கிழக்கில் நிலவுதாகக்கூறப்படும் சகல தரத்தினையும் சேர்ந்த வெற்றிடங்கள் 5083பேருக்கும் நியமனம் வழங்க மத்தியஅரசு அந்த அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்குமா? இதில் எமக்கு சந்தேகமுள்ளது.
சிங்களபட்டதாரிகளைப்பொறுத்தவரை 2015வரையிலான பட்டதாரிகளுக்கு ஏலவே தொழில் வழங்கப்பட்டுவிட்டது.ஆனால் அவர்களுக்கு 1300வரை வெற்றிடம் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இந்த 17நாட்களிலும் பல அரசியல்வாதிகள் பொதுநலஅமைப்புகள் எனப்பலரும் வந்து போயிருக்கின்றனர். அனைவருக்கும் நன்றிகள்.அதேவேளை எமக்கு இன்னமும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனும்போது மனம் குமுறுகின்றது.

எனவே யார் என்ன சொன்னாலும் எமக்கான நியமனங்கள் கையில் கிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு ஒருபோதும் நகரப்போவதில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -