2015 ம் ஆண்டு தேசியப் பட்டியல் பிரச்சினையின் உண்மை யதார்த்தம் - பாகம் 2

டந்த பதிவில் றிசாட் எனது வீடு தேடிவந்து தேசியப்பட்டியலை எடுங்கள் என்று சொன்னதையும் இன்ஷா அல்லாஹ் தேர்தலுக்கு காலம் இருக்கின்றது; உரிய நேரத்தில் பேசி முடிவெடுப்போம்; என்று நான் கூறியதையும் பதிவிட்டிருந்தேன்.

'தூண்டில் போட்டவனுக்கு மப்பிலில் கண்' என்பார்கள். அதுபோல் எப்படியாவது தேசியப்பட்டியலில் வருவதற்கு எனது சம்மதத்தைப் பெற்றுவிடவேண்டும்; என்பதில் றிசாட் குறியாக இருந்தார். குறைந்தது எட்டுத்தடவைக்கு மேல் என்னிடம் தேசியப்பட்டிலை நான் எடுக்க வேண்டுமென்று பேசியிருப்பார். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு காரணத்தைக் கூறினார்.

ஒரு தடவை சொன்னார், ' இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்காக பங்களிப்புச் செய்வதற்கு யாருமில்லை. அதற்குப் பொருத்தமானவர் நீங்கள்தான், எனவே உள்ளூர் அரசியலை விட்டுவிட்டு தேசியப்பட்டியலில் வந்து தேசியரீதியாக பங்களிப்புச் செய்யுங்கள்; என்றார். அப்பொழுதும் அதே பதிலையே கூறினேன்.

இன்னொருதடவை, சதொச அலுவலகத்தில் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன்; இருவரும் தனியாக அமர்ந்ததும் நான் சந்திக்கச் சென்ற விடயத்தைப்பற்றிப் பேசாமல் தேசியப்பட்டியலைப் பற்றியே பேசினார். 

அவர் இன்று பாராளுமன்றத்தில் முதலாம் இடத்தில் பிரதமர் இருக்கின்றார், இரண்டாம் இடத்தில் திரு சுமந்திரன் இருக்கின்றார். இன்ஷா அல்லாஹ் நீங்கள் பாராளுமன்றம் வந்தால் ஒன்றில் மூன்றாம் இடத்திற்கு வருவீர்கள், சிலவேளை சுமந்திரனேயே பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்தாலும் வருவீர்கள். அல்லாஹ் அவ்வளவு திறமைகளை உங்களுக்கு தந்திருக்கின்றான், கல்முனையானைத் திருப்திப்படுத்த முடியாது. எனவே உள்ளூர் அரசியலை விட்டுவிட்டு தேசியப்பட்டியலில் வாருங்கள்' என்றார். (இங்கு அவர் கூறிய அதே வசனங்களை எதுவிதமாற்றமுமில்லாமல் தந்திருக்கின்றேன்.) இதே போன்று தொலைபேசியில் பேசியிருக்கின்றார், நேரில் பேசியிருக்கின்றார். அத்தனை தடவைகளும் நான் கூறிய பதில் ஒன்றுதான்.

இங்கு எழுகின்ற, நான் கடந்த பதிவில் கூறியதுபோன்று அவர்மீதிருந்த நம்பிக்கை காரணமாக நான் சிந்திக்கத் தவறிய கேள்வி என்னவென்றால், பாராளுமன்றம் கலைக்கப்படாத சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தபோது 'தேசியப் பட்டியலில் வருவதற்கு உடன் படுகின்றேன்;' என்ற அந்த பதிலை என்னிடமிருந்து பெறுவதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும். நான் தேசியப்பட்டியலிலை மறுக்கவுமில்லை, அதே நேரம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்நிலையில் இந்த வற்புறுத்தல் ஏன்?

அம்பாறையில் எனது களவேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் மூலம் நான் தேர்தல் மூலம் பாராளுமன்றம் செல்கின்ற சந்தர்ப்பத்தை தடுக்க வேண்டும். தேசியப்பட்டியலில் வருவதற்கு சம்மதிக்க வைத்துவிட்டால் பின்னர் தன் கைவரிசையை காட்டிவிடலாம்; என்பதைத்தவிர வேறு என்ன நோக்கமாக இருந்திருக்க முடியும்.

மட்டுமல்லாமல், எனக்கு நெருக்கமான, அல்லது என்னோடு தொடர்பில் இருக்கின்றவர்களைச் சந்தித்தால், ' வை எல் எஸ் ஹமீட் இம்முறை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்கின்றார்; என்று தொடர்ந்து சொல்லி வந்தார். சிலவேளை, இவ்வாறு கூறினால், அவர்கள் அதனை எனக்கு எத்திவைப்பார்கள். அதன் மூலம் றிசாட் மீது எனக்கு நம்பிக்கை வலுவாகும்; என்று நினைத்திருக்க வேண்டும்.

அதே நேரம் றிசாட் தன் மனதுக்குள் , ' என்னை நம்பினாயா? வாக்கு வங்கி கிழக்கில் இருக்க வன்னிக்கேன் தலைமைத்துவம் என்று கேட்டவர்களின் வாய்களை அடைக்க வைத்து நான் தலைமைக் கதிரையில் அமர / அமைச்சர் பதவியை அலங்கரிக்க துணை நின்றாயா? பன்னிரண்டு வருடம் எங்களுடன் பயணித்த உனக்கு, உன் அரசியலை பூச்சியமாக்குவதைத் தவிர வேறு என்ன கைமாறு செய்ய முடியும்? நீ பாராளுமன்றத்தில் காலடியெடுத்துவைக்க அனுமதிப்பேனா? சதி செய்வது. அப்பாவி வேசம் போட்டு கூட இருப்பவனுக்கு குழி பறிப்பது, நான் இன்று நேற்றுத் தொடங்கியதா?

நான் யார் என்று தெரியாமல் என்னை நீ நம்பியது உன் குற்றமா அல்லது என் குற்றமா? நன்றிக்கடனா? அது வாழ்க்கையின் முன்னேற்றத்தின் ஒரு பிரதான தடைக்கல் என்பது உனக்குத் தெரியாதா? நன்றியுள்ள மனிதர்களில் தோற்றவர்கள் அதிகமா? வென்றவர்கள் அதிகமா? என்னையும் நன்றியுள்ள மனிதர்கள் வரிசையில் தோற்றுப் போகச் சொல்கிறாயா?

'நேர்மை, உண்மை, மனச்சாட்சி?'ஏமாளிகள் தங்கள் தோல்விகளுக்குப் போடுகின்ற உறைகள் அவை. வென்றவனைக் கேட்டுப்பார் நேர்மையா அவனை வெல்லவைத்தது; என்று.

உண்மை, அழகான சொல். வாழ்க்கையின் உச்சாணிக் கொப்பில் ஏறியவனைக் கேட்டுப்பார் ' உண்மை'யா அவனை உயர்த்தியதென்று.

'மனச்சாட்சி'- மண்ணாங்கட்டி, அவை வெட்டில் பேச்சு. அழகிலாப் பெண் வெளியில் செல்லும் போது அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து ஜொலிப்பதைக் கேள்விப்படவில்லையா? அதற்காக அதுவே அவளது அழகென்று நினைத்தாயா? அதேபோன்றுதான் மேடைப்பேச்சிற்கு அணிகலன்கள்தான், உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாம். அதற்காக அதுவே வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கோர் மறுபக்கம் இருக்கின்றது. வாழ்க்கை என்பது வெளியே தெரியும் பக்கமல்ல. அதைத்தான் உனக்கு காட்டியிருக்கிறேன்.

இதுதான் றிசாட் எனக்கு உணத்தியிருக்கும் செய்தி.

மறுபுறம், மற்றவர், ' நான் அமர்ந்து அலங்கரிக்க வேண்டிய கதிரையில் யார் யாரோ அமர்ந்து ' பிரபஞ்சத் தலைவர் பட்டம் சூடிக்கொண்டிருக்க, நான் பெருமூச்சுடன் பாதிக்கதிரையில், இன்னும். நான் அமரவேண்டிய கதிரையை யாருக்குக் கிடைக்க நீ களமமைத்தாயோ அவரைக்கொண்டே உனக்கு குழிபறிக்கின்றேன்; பார்; என்ற இறுமாப்பில் அவர்.

இருவருக்கும் புரியாதது, எதில் 'ஹைர்'- நலவு, எதில் ' ஷர்ரு' தீயது, இருக்கின்றது; என்பதை அறிந்தவன் அந்த ஏகன் மாத்திரம்தான். சதிகள் தற்காலிகமாக வெற்றிபெற்றதாக தோற்றலாம். இறுதியில் சத்தியமே வெல்லும். என்பது.

இந்நிலையில் இவர்களது வஞ்சகத்திட்டங்களும் பழிவாங்கும் படலங்களும் திரைமறைவில் அரங்கேற - பாராளுமன்றம் - கலைந்து விட்டது. அது ரமழான் மாதம்.
வை எல் எஸ் ஹமீட்.
(தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -