கல்முனையில் டெங்கு காய்ச்சல் - 24 வயது நிலா மறைந்தது

பாறுக் ஷிஹான்-
ல்முனை பாண்டிருப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த இளைஞனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன் திடிரென வீட்டில் மயங்கிவிழுந்துள்ளார்.

இதன் போது தலை தரையில் பலமாக அடிபட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(15) சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாண்டிருப்பை சோ்ந்த வள்ளியப்பன் நிலக்க்ஷன் (நிலா) (வயது-24) என்பவராவார். இவ் இளைஞனின் இழப்பு அப் பிரதேசத்தில் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  கடந்த சில தினங்களாக இவர் பூரண குணமடையவேண்டும் என்று நண்பர்களும் உறவினர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -