மு.இராமச்சந்திரன்-
பொகவந்தலா டின்சின் தோட்டத்தில் ஏற்பட்ட மினி சூராவளியினால் 25 வீடுகள் சேதமாகியுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்தும் பெய்து வரும் மழைக் கால நிலையில் 09.03.2017. மாலை 4 மணியளவில் ஐஸ் மழையுடன் ஏற்பட்ட மினி சூராவளியிலே மேற்படி வீடுகளின் கூறைகள் சேதமாகியுள்ளது.
பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்களுக்கு மாற்றீடு செய்ய பொலிஸாரும் தோட்ட நிருவாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மலையகத்தில் மழை பெய்துவருகின்றதுடன் லிந்துலை மெரேயா பகுதிகளிலும் மினி சூராவளியினால் குடியிருகள் சேதமாகியமை குறிப்பிடத்தக்கது.