ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கின் ஒரு தொகுதி நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாடடு கட்டடித் தொகுதியும் விளையாட்டுத் துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜெயசேகர அவர்களால் இன்று 17ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. சுமார் 275 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கபட்ட இந்த கட்டிடத் தொகுதியின் திறப்புவிழாவின் போது விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்ளும்; வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி திசநாயக்க மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை மற்றும் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகருப் இம்ரான் மகருப் கிழக்கு மாகாணசபை உறுப்பினறும் விளையாட்டுத் திணைக்கள மேற்பார்வை உறுப்பினருமான ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.லாகிர் உட்பட பல அதிகாரிகளும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மக்கெய்சர் விளையாட்டரங்கில் சில மாதங்களுக்கு முன் நிர்மானப்பணியின் போது எழும்புத்துண்டுகள் கண்டடெடுக்கப்பட்டதன் நிமிர்த்தம் இந்த மைதான புனரமைப்பு பணிகள் நீதி மன்ற உத்தரவின் பெயரால் நிறுத்தபட்டிருந்தது.எனினும் எழும்புத் துண்டுகள் கண்டெடுக்கபட்ட இடத்தை தவிர்ந்த அதன் அருகில் இருந்த நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்ரங்கு என்பன தற்போது முதற்கட்டமாக புனரமைத்து இன்று வீரர்களின் செயற்பாட்டுக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.