ஏ.எம்.கீத், அப்துலசலாம் யாசீம்-
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில டெங்கு நோயின் தாக்கம் அதிகமானதின் விளைவாக கிண்ணியா வலய கல்வி பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசலைகளும் 3நாட்களுக்கு மூடுமாறு கிண்ணியா வலய கல்வி திணைக்களம் உத்தரவு இட்டிருக்கின்றது.
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 முஸ்லிம் தமிழ் பாடசாலைகள் இன்று 15ம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு மூடுவதற்கான அறிவிப்பை கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை விடுத்துள்ளார்.
கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் பாடசாலைக்கு வருகைதரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
,
இவ்வாரான காரணங்களை தெளிவுபடுத்தி கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர். மற்றும் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு 15.16.17 ஆகிய தினங்களில் பாடசாலைகளை கிண்ணியா கல்வி வலயத்தில் மூடுவதற்கான அறிவிப்பை வழங்கியுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர்ஏ.எம்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.
மேலும் கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து இன்றுவரை 37பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்டதில் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளன மேலும் கிண்ணியா தள வைத்தியசாலையில் 197 பேர் டெங்கு நோய் என இனங்காணப்பட்டு தங்கி சிகிச்சை பெற்றுவருகின்ற போதிலும் 1076 பேர் டெங்கு நோய் தாக்கத்தி ற்கு உட்பட்டுள்ளதாக இனங்காபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.