அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியாவில் டெங்கு பரவும் விதத்தில் சுற்றுப்புரச்சூழலை அசுத்தமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 30 பேருக்கும் 3000 மூவாயிரம் ரூபாய் வீதம் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா பொது சுகாதார பரிசோதகர்களினால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்ட நிலையில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஹம்ஸா சுற்றுப்புரச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இவ்வாறான முறைப்பாடுகள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்ததுடன் தண்டமாக 3000 மூவாயிரம் ரூபாய் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
கிண்ணியாவில் டெங்கு பரவி வருவதினால் சுற்றுப்புரச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறியும் எதுவித நடவடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கியும் அதனையும் பின்பற்றாதவர்களுக்கே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவில் தொடர்ந்தும் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர்.