ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா பகுதியை தங்களது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இந்தப் போராளிகள் குறித்த கடல் வழியாக ஆயுதங்களை கடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோமாலியாவை சேர்ந்த சுமார் 100இற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கலம் தேடி, சுவிடனிற்கு சென்றுள்ளனர். அத்தோடு குறித்த அகதிகள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் அளித்திருந்த அடையாளச் சான்றிதழ்களுடன் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள் மீது ஏமன் படையினர் விமானத்தாக்குதல் ஒற்றை தடுத்துள்ளனர். குறித்த தாக்குதலில் 31 பேர் பலியானதாகவும், குண்டு வீச்சினால் சேதமடைந்த படகில் இருந்து, கடலில் குதித்து உயிர் தப்பிய சுமார் 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
அத்தோடு ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரசின் துணையுடன், ஏமன் இராணுவம், கடற்படை, விமானப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹோடைடா பகுதியை ஒட்டியுள்ள பாப் அல்-மன்டேப் கடற்பரப்பில் பயணித்த சோமாலிய அகதிகளை ஏமன் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியுள்ளமை குறித்த பிராந்தியத்தின் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)