சப்னி அஹமட்-
கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கு 3821பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், அதில் திருகோணமலையில் 2088பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100பேர் பாதிப்புக்குளானதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலமையில் டெங்கு நோய் பரவது தொடர்பாக சுகாதார , உள்ளுராட்சிமன்ற, திணைக்கள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றினை நேற்று (15) ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கமைய, கிழக்கு மாகாண திருகோணமலை பிரதேசத்தில் அதிகம் பரவும் டெங்கு நோயை தடுப்பது தொடர்பாகவும், அதனை தடுப்பதற்கு மேற்கொள்ளவுள்ள விசேட திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ப்பட்டது. குறிப்பாக திருகோணமலை பிரதேசத்தின் உள்ளுராட்சி மன்ற திணைக்களங்களும், சுகாதார திணைக்களங்களும் விசேட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதும் இன்னும் அதன் வேகத்தை அதிகரித்து டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயபட்டது.
சில முன்னெடுப்பக்கள் மூலம் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அந்தவகையில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுவத்துவது எனவும், உள்ளுராட்சிமன்றத்தின் வேலைகளை இன்னும் அதிகம் ஏனைய ஊழிகர்களை உள்வாங்கி சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அதற்கு தேவையான வாகன வசதிகளை ஏற்படுத்துக்கொள்ளவுள்ளதாகவும், நிதி பற்றாக்குறை பற்றி ஆராய்யப்பட்டது அதற்கான ஏற்பாடுகளை மாகாண சுகாதார அமைச்சும் பிரதம செயலாளர் அலுவலகும் செய்யவுள்ளதுடன் பிரதமரினால் 05மில்லியண்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுவரை கிண்ணியா பிரதேசத்தில் 09பேர் மரணித்ததுடன் குருஞ்சாக்கேனியில் 03வரும் குச்சவெளியில் 01வரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02வரும் மரணித்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகளவிலான பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி எவ்வாறு டெங்கினை கட்டுப்படுத்த முடியுமோ அவ்வாறு மிக விசேடமாக செயற்பட்டுவருவதுடன் கடந்த 02 தினங்களாக வைத்தியசாலையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் வரவு குறைந்த நிலையில் காணப்படுவதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
காய்ச்சல் எனும் நோய் தெண்பட்டாலே அம்மக்கள் வைத்தியசாலைக்கு வர வேண்டும் குறிப்பாக கிண்ணியா பிரதேசத மக்களில் சிலர் காய்ச்சல் வந்து சில நாட்களின் பின்னரே வைத்தியரை நாடுவதாக எம்மிடம் வைத்தியர்கள் கூறியுள்ளனர் ஆகவே காய்ச்சலின் அறிகுறி தெண்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்.
கிண்ணியா பிரதேசமக்கள் அதிகளவு இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையினருடனும், உள்ளுராட்சிமன்ற ஊழியர்களுடனும் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் திணைக்களங்களில் உதவிகளுடம் மாத்திரம் எம்மால் டெங்கினை கட்டுப்படுத்த முடியாது பொதுமக்களின் ஒத்துழைப்பு பாரியளவில் எதிர்பார்க்கின்றோம் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதுபோல் பாடசாலை மாணவர்களின் வரவு 40% காணப்படுவதானலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கற்கும், கற்றுக்கொடுக்கும் சக்திகள் இல்லாத நிலையில் காணப்படுகின்றனர் இதற்கமைவாகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.