பள்ளிவாசல் மீது தாக்குதல்: 42 பேர் பலி: சிரியாவில் சம்பவம்..!

ள்ளிவாசலிலுள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.



சிரியாவின் வடக்கு பகுதியிலுள்ள அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்ஜினா கிராமத்தில், பிராத்தனைகள் இடம்பெற்ற பள்ளிவாசல் மீது, நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்ததாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளாகவும் சிரிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் பகிர்ந்துள்ளது.



குறித்த தாக்குதலால் பள்ளிவாசலின் கட்டிடம் இடிந்துவிழுந்துள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கிய நிலையிலே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக அலெப்போ பகுதியை பொறுத்த வரையில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிராந்தியத்தில் சிரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்களே வான்வெளித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றன.



இந்நிலையில் குறித்த பிராந்தியத்தில் ஐஎஸ் அமைப்பினரின் ஊடுருவல்கள் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதோடு, இதுவரை தாக்குதல் நடத்திய விமானம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -