கிழக்கில் 47 மருந்தாளர்களுக்கு நியமனம்..!

அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தில் 47 பேருக்கான மருந்து கலவையாளர்கள் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மாலை 4.30 மணியளவில் (20) கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்;

கிழக்கு மாகாணத்தில் 59 மருந்து கலவையாளர்களுக்கான வெற்றிடம் உள்ள போதும் நாம் எடுத்துக்ககொண்ட தீவிர முயற்சியின் பலனாக இன்று 47 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்று வகையில் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது . அதில் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்ட மருந்து கலவையாளர்களுக்கான நியமனங்களில் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கி நியமனம் இரத்து செய்து இம்முறை அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ளீர்க்கப்பட்டனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

அது போல் மிகுதியாகவுள்ள மருந்து கலவையாளர்களுக்கான வெற்றிடம் மிகவிரைவில் பூர்த்தி செய்யப்பட்டு முழு கிழக்கிலும் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் மருந்துகலவையாளர்கள் வெற்றிடு பூர்த்திசெய்யப்படும். அது போல் மருந்து கலவையாளர்கள் தங்களது கடமையை மிகநேர்த்தியான முறையில் தங்களது கடமையகளை செய்வீர்கள்எனவும் தங்களக்கு தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுடன் அவர்களின் உத்தரவுகளுக்கு அமைய உங்களுக்கு வழங்கப்படுகின்ற இடத்திற்கு ஏற்றாப்போலும் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.முருகானந்தன் செயலாளர் கே.கருனாகரன் உதவிச்செயலாளர் உசைனுடீன் மேலதிக மாகாணப்பணிப்பாளர் லதாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -