அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் டெங்கு பரவும் விதத்தில் சுற்றுப்புரச்சூழலை அசுத்தமாக வைத்திருந்த 58 நபர்களுக்கு 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு இன்று (28) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள்.உள்ளுராட்சி மன்றங்கள்.பொலிஸார் மற்றும் முப்படையினர்கள் இணைந்து வீடு வீடாகச்சென்று டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்குறிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வந்தனர்.
இருந்தபோதிலும் திருகோணமலை. தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் எச்சரிக்கைகள் விடுக்கப்ட்டிருந்தும் டெங்கு பரவும் விதத்தில் சுற்றுப்புரச்சூழலை வைத்திருந்தவர்களுக்கே இன்றைய தினம் பிரதம நீதவான் எச்சரிக்கை விடுத்து இனிவரும் காலங்களில் இவ்வாறான குற்றங்கள் இடம் பெறக்கூடாது என கூறி 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.