அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. எனினும், குறித்த சிறுவன் உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தான் இன்னும் 7 நாளில் உயிரிழக்கப்போவதாக எழுதிவைத்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது, படுக்கை அறைக்கு அருகில் உள்ள சுவர் ஒன்றிலேயே தான் "இது நரகம்.. நான் சுவர்க்கத்துக்கு போகிறேன். இன்னும் ஏழு நாட்களில் இறந்து விடுவேன் என எழுதிவைத்துள்ளார்.
இச்சிறுவனின் செயற்பாடுகள் ஆச்சரியத்தையே ஏற்ப்படுத்தியதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையிலேயே குறித்த சிறுவன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.