காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யாவின் அதிருப்தியும் கண்டனமும்..!

அல்அதர் மீடியா-
டந்த 10.03.2017 அன்று காத்தான்குடி-06, அலியார் சந்தியில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரால் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார கூட்டமொன்றை மேற்கொள்ளவிருந்தபோது அப்பகுதியில் வைத்து குறித்த ஜமாஅத்தினருக்கும் அத்வைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயமடைந்தும் 10 பேர் காத்தான்குடி பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைத்திருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் எமது அமைப்பு வலியுறுத்துகின்றது.

இந்நிலையில் இந்நிகழ்வுடன் தொடர்புபடுத்தி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் முஸம்மில் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (15.03.2017) புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காத்தான்குடி நகர சபை செயலாளர், உதவி பிரதேச செயலாளர், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாயல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள், காத்தான்குடி வர்த்தக சங்க பிரதி நிதிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தாருல் அதர் அத்தஅவிய்யா தமது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக காத்தான்குடியில் வேரூன்றியுள்ள அத்வைத சித்தார்ந்தங்களுக்கு எதிராக தௌஹீத் அமைப்புக்கள் பொது இடங்கள் மற்றும் வீதியோரங்களில் மார்க்கப்பிரச்சாரக் கூட்டங்கள் ஊடாக அவ்வப்போது மக்களுக்கு தெளிவூட்டல்களையும் விழிப்புணர்வுகளையும் வழங்கிவருகின்ற இவ்வேளையில், தெளஹீத் அமைப்புகளை ஓரம் கட்டி இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பது தௌஹீத் அமைப்புக்களின் பிரச்சாரத்தை திட்டமிட்டு முடக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

'அதான் சொல்லுதல், பொது அறிவித்தல்கள் வாசித்தல், இரு பெருநாட்கள் ஆகியவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்கள் மற்றும் வைபங்களின் போதும் வெளி ஒலி பெருக்கி பாவிப்பதை முற்றாக தடை செய்வதல்" எனும் தீர்மானம் எமதூரிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களுக்கும் நெருக்கடியாகவும் பள்ளிவாயல்களின் தனித்துவத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளதுடன் இந்நாட்டில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சமயம் சார்ந்த உரிமையை இல்லாதொழிக்கும் வழிமுறையாகவும் உணரப்படவேண்டியுள்ளது. 

இத்தகைய தீர்மானங்கள் காலப்போக்கில் பெரும்பான்மை இனங்களிடம் சிறிய நிகழ்வுகளுக்கும் அனுமதிக்காக கையேந்தவேண்டிய நிலை உருவாகக் காரணமாக அமையும்.

பொதுவாக மார்க்க மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களின் போது முன்னதாகவே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். சர்ச்சைக்குரிய இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கிய பொலீஸார் சம்பவம் நடைபெற்று முடியும் வரைக்கும் பாதுகாப்பு வழங்காமையானது குறித்த இடத்தில் வன்முறை இடம்பெறுவதற்கு பிரதான காரணமே தவிர குறித்த அமைப்பினருக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான வீதி அனுமதியோ அல்லது ஒலிபெருக்கி பாவனை அனுமதியோ அல்ல என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இதற்கு முன்னரும் குறித்த இடத்தில் மார்க்க மற்றும் அரசியல் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பது யாவரும் அறிந்த விடயம்.

அமைதி, சமாதானம், ஊர் ஒற்றுமை எனும் காரணங்களால் சமயம் சார்ந்த விடயங்களில் சட்டத்திற்கு முரணான, பெறுமதியற்ற கருத்துக்களை கூறி பன்மைச் சமூகம் வாழும் இந்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என நாம் வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.
தாருல் அதர் அத்தஅவிய்யா.
காத்தான்குடி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -