மக்களுக்கு கூடுதலாக சேவையாற்ற உறுதிபூண்டுள்ளேன் - அமைச்சர் ஹக்கீம்

மிகச் சிறந்த நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் இரண்டரை பில்லியன் பணத்தை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும், நவீனமயமான வர்த்தக யுத்திகளை கையாண்டு தனியார் துறையின் பங்களிப்போடும், தொழிற்சங்கஙகளின் ஒத்துழைப்போடும் பொது மக்களுக்கு கூடுதலாக சேவையாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட அரச திணைக்களங்களுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளும் முதற்கட்ட நிகழ்வுகள் புதன்கிழமை (15) முற்பகல் நிதியமைச்சின் பொதுதிறைசேரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைசச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றுமபோது கூறியதாவது,

நீரை விரயமாகாமல் சேகரித்து எங்களது தனித்துவமான சீரமைப்பைக் கையாண்டு, பாவனையாளர்களுக்கு போதிய நீரை விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாவும் அமைச்சர் ஹக்கீம் அங்கு தெரிவித்தார். 

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அங்கு உரையாற்றினார். அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தண ஆகியோரும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் இதில் பங்குபற்றினர்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகார சபை, விமான சேவைகள் நிறுவனம் என்பன இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உள்வாங்கப்பட்டிருந்தன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -