சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் மாணவத்தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு.!

எம்.வை.அமீர் யு.கே.காலிதீன்-
சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் உள்ள லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவத்தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டு நிகழ்வும், பாடசாலையின் நீண்டநாள் தேவையாக இருந்த போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை கையேற்கும் நிகழ்வும் 2017-03-15 ஆம் திகதி பாடசாலையின் வரவேற்பு மண்டபத்தில் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாணசபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுடீன் மற்றும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.எம்.றசூல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள அடிப்படைவசதிகள் குறைந்த மேற்படி பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுடீன் தனது அயராத முயற்சியினால் பெற்றுக்கொடுத்திருந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூரநோக்குள்ள தலைவர் றவூப் ஹக்கீமுடைய வழிகாட்டலின் கீழ், தான் பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளை மேற்கொண்டுவருவதாகவும் அந்த அடிப்படையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருவதாகவும், பாடசாலைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி ஜனநாயக ரீதியில் வாக்களித்து பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனூடாக சிறந்த தலைமைகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த ஆரீப் சம்சுடீன், தற்காலத்தில் நடைபெறும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் தங்களது கவனங்களை மக்கள் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்ககொண்டார்.

நீண்டகாலமாக தாங்கள் மட்டும் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு மக்களுக்கு எதையுமே செய்யாத சிலர், தொடர்ந்தும் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எதையேல்லாமே கூறுகிறார்கள். இவர்கள் விடயத்தில் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸினால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் தொடர்பில் முடிந்த முன்னெடுப்புக்களை எடுப்பதாகவும் அவசர தேவையாகவுள்ள கழிவறைப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைப்பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். நிகழ்வில் பிரதி அதிபர் மற்றும் ஆசிர்யர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -