திருகோணமலை : கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவு

அப்துல்சலாம் யாசீம்-
லங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 08 இந்தியா மீனவர்களையும் விடுவிக்குமாறு இன்று (14) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 03ம் திகதி முல்லைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுகப்பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்றைய தினம் இலங்கை கடற்படை திருகோணமலை தலைமையகத்தின் ஊடாக இந்தியா கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -