அபு அலா -
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் ஆலோசகராக நிந்தவுர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான கடிதத்தினை இன்று (16) சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தனாவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிந்தவுர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நியமனம் இம்மாதம் 3 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு சுகாதார அமைச்சின் ஆலோசகராக இருந்து செயற்படுவதற்கான பதவி எனவும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கான ஆலோசகர்களை துறைசார் அமைச்சர் நியமிப்பது வழமை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுர்வேத துறையில் இவ்வாறு ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என்றும் அதிலும் தழிழ் மொழி பேசும் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதும் என்பதும் ஒரு விஷேட அம்சமாகும் என்றும் இதன் மூலம் எதிர்காலத்தில் முழுமையான பங்களிப்புக்ளை அமைச்சர் ராஜித சேனாரத்தனவின் தலைமையில் சிறந்ததொரு சுதேச சேவைகளை வழங்கவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.