சுசித்ரா ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ், அனிருத் பற்றிய ரகசியங்களை பகிர்ந்தார். அது கூட எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் நட்பு ரீதியான விஷயங்களே.
ஆனால் அதன் பின் வெளிவரும் அனைத்து அந்தரங்கப் படங்களும் அவர் வெளியிடவில்லை என்பதை அறிவீர்களா ? அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்.
கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் வெளியாகி வரும் டிவீட்கள், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த டிவீட்களில் பாடகி சின்மயி குறித்தும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தன்னை பற்றிய தவறான கருத்துகளை பரப்பியதற்காக சுசித்ராவை சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானதில் திரையுலகினர் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இப்போது பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். இந்த இரண்டுநாட்களில் விஜய் டிவி டிடியின் அந்தரங்கப் புகைப்படங்கள், அனுயா, த்ரிஷா போன்ற நடிகையரின் ஆபாசப் படங்களை வெளியிடுவது மலேசியாவில் இயங்கி வரும் ஒரு திருட்டு வி.சி.டி நிறுவனம்தான் என்கிறார்கள்.
கோடம்பாக்கம் பத்திரிகையாளர்கள் சிலர் கூறும்போது அந்த மலேசிய நிறுவனம் சிங்கம் படக் குழுவினருடன் மோதியது. சொன்னது போலவே அப்படத்தை இணையத்தில் வெளியிடவும் செய்தது.
அவர்கள் தான் பல பேரிடம் ரகசியமாக இருக்கும் அந்தரங்கப் படங்களை விலை கொடுத்து வாங்கி சுசித்ரா பெயரில் வெளியிடுகிறது என்கிறார்கள். மேலும் நிறைய பேரின் ஆபாசப் படங்கள் அடுத்தது வெளியாகும் என்று சுசித்ரா பெயரில் நேற்று இரவு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியால் கோலிவுட் சினிமா, தூக்கத்தை இழந்து தவிக்கிறது..?
டுவிட்டரில் ஆபாச படம், செய்திகளை வெளியிட்ட பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டதாக அவரது கணவர் கார்த்திக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா, “மர்ம நபர்களால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய புகைப்படமும் என்னிடம் இல்லை. நான் யாரையும் இழிவுபடுத்தும் ஆள் இல்லை. முன்பும் ஒருமுறை என் டுவிட்டர் முடக்கப்பட்டது. என்னை தொடர் பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாடகி சுசித்ராவின் கணவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், “சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கார்த்திக்கின் இந்த விளக்கத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.