ஹஸனலிக்கு, எழுத்தாளர் ஹனீபாவின் திறந்த மடல்..!

ண்பனே! தேசத்தின் முன்னாலும் குறிப்பாக நமது சமூகத்தின் மத்தியிலும் உங்களால் முன்வைக்கப்படும் உண்மைகளும் யதார்த்தங்களும் கவனத்திற் கொள்ளப்படாமைக்குக் காரணம் என்ன? கட்சியின் சரிபாதை உரிமையாளனாக நீங்கள் கட்சியில் இருந்த காலத்தில், இந்த உண்மைகளில் எதையுமே சொல்லவில்லை. மாறாக நீங்கள் சேர்ந்து கட்டிக் காத்த அந்தரங்கங்களை எந்தவித உரிமையுமற்றிருக்கும் இந்த நாளில் நடுத்தெருவுக்கு வந்து நின்று அள்ளி வீசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

உங்கள் உண்மைகளும் யதார்த்தங்களும் உள்ளது போல், நீங்களும் இன்று சாயம் வெளுத்து பத்தோடு பதினொன்றாகிப் போனீர்கள். காலங்கடந்த ஞானம் ஒரு போதும் நம்மைக் கரை சேர்க்காது. கடந்த ஒரு தசாப்தகாலமாக நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளால் நமது மக்கள் நட்டாற்றில் கைவிடப்பட்ட போதெல்லாம் – நீங்கள் வெள்ளையுடுத்து அல்லாஹ்விடம் முறையீடு செய்ய உம்ரா செல்லவில்லை. மாறாக, நீங்கள் ஏமாற்றப்பட்டதற்காக கைவிடப்பட்டதற்காக இறைவனைத் தேடி கஃபாவுக்குச் சென்றிருக்கிறீர்கள். மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மண்ணறையையும் தரிசித்திருக்கிறீர்கள்.

“எனக்கு அநியாயம் செய்து விட்டார்கள்” என்ற உங்களின் வார்த்தையை எங்களுக்கென்றாவது சொல்லியிருந்தால், ஒரு வீதமாவது பெறுமதி கொண்டிருக்கும்.

நண்பனே! ஒரு சிறு விடயத்தை மட்டும் சொல்லி கடித்த்தை முடித்துக் கொள்கிறேன்.

தலைவரின் மௌத்தைத் தொடர்ந்து சகோதரர் ஹகீம் அவர்கள் தலைமைப் பதவியையும் அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற அந்த நாட்களில், ரக்ஷணமந்திரவுக்கு என்னை நீங்கள் விடாப்பிடியாக அழைத்து, இவ்வாறு கூறியதை எண்ணிப் பாருங்கள்:

“எஸ்எல்.எம்.! என்னைப் பற்றி ஹகீமுக்கு அவ்வளவாகத் தெரியாது. கட்சியோடு நான் எப்படித் தொடர்புபட்டவன் என்பதை நீங்கள் அவருக்கு அழகாக எடுத்துக் கூற வேண்டும்” என்றீர்கள்.

அன்பான உங்களின் வேண்டுகோளை ஏற்று, உடனலக் குறைவோடும் கொழும்பு வந்து சகோதரர் ஹகீமுக்கு முன்னால், நான் உங்களுக்காக சாட்சியமளித்த்தை எண்ணிப் பாருங்கள். அன்று நான் உங்களிடம் கையளித்து வந்த பல நூற்றுக் கணக்கான அரிய புகைப்படங்களும் இன்று அதற்கு சாட்சி சொல்லுமல்லவா? அதற்குப் பிறகு நீங்கள் மூன்று தடவைகள் பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறீர்கள். ஒரு நாளாவது உங்களின் இந்த நண்பனை நீங்கள் நினைவு கூர்ந்திருப்பீர்களா?

எனவே, நாம் ஒவ்வொருவரும் நமக்கு சந்தர்ப்பங்களும் அனுகூலங்களும் வரப்பிரசாதங்களும் கிடைக்கும் போது, வழிகாட்டியவர்களை இலேசாக மறந்து விடுகின்றோம்.

இன்று அதுதான் உங்களுக்கும் நடந்திருக்கிறது.

பிரதி சுகாதார அமைச்சராக நீங்கள் இருந்த போது, வாழைச்சேனைக்கும் வருகை தந்தீர்கள். உங்களைக் கண்டு கதைப்பதற்காக நான் வந்தேன். என்னால் முடியவில்லை. வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு உங்கள் காலத்தில் எமது பகுதி மக்களின் சூத்தைப் பற்களைப் பிடுங்கிக் கொள்வதற்காவது ஒரு கதிரையையாவது தங்களிடம் பெற்றுக் கொடுக்கலாம் என்ற ஆசை எனக்கு இருந்தது. நீங்கள் எதுவுமே செய்யவில்லை.

அமைதியடையுங்கள் நண்பனே! சமூகத்திற்கு நல்வழி காட்டுங்கள்.

உங்கள் பிரார்த்தனையில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து நான் உங்களுக்கு இவ்வாறான சில கடிதங்கள் எழுத இருக்கிறேன்.
எம்.எம்.நிலாம்டீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -