தனி மனித வாழ்வில் அன்பு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கும் தந்தையின் தியாகமும் பெறுமதியான ஆலோசனைகளும் வழிகாட்டலுமே ஓர் சிறந்த பிள்ளைக்கு உலகில் விலை மதிக்க முடியா வாழ்வியல் வேதமாகும். கசப்பாயினும் தந்தையின் அறநெறியையும் கட்டுப்பாடுகளையும் கட்டளைகளையும் உணர்ந்து மதித்து வழிபட்டோரே வாழ்வில் உச்சத்தை அடைந்தோராவர், உதாசீனம் செய்வோர் சீரழிவர் இது உலக வழக்கு.
ஒவ்வொரு தந்தையும் தன் மனதில் தன் பிள்ளையை உயிரிலும் மேலான உறவாகக்கொண்டு பிள்ளையின் எதிர்கால நல்வாழ்விற்காக தன்னையே வருத்தி அர்பணிக்க துணியும் இலாபம் எதிர்பார்க்கா கபடம், வேசம் போடாத ஓர் ஆண் படைப்பு. தன் அன்பை அதிகாரம் மற்றும் தண்டனை வடிவில் வெளிப்படுத்தும் சுயநலம் அற்ற ஓர் நல் ஆசான். கன்னியமிக்க தந்தையின் அறவனைப்புமிகு அறிவுரைப்பாசறையே உலகியல் வாழ்விற்கான ஒட்டுமொத்த படிபினைகளை கற்றுத்தேறக்கூடிய உயரிய சந்திதானமாகும்.
தந்தையுடன் வாழ்வில் அதிக நேரங்களைசெலவிட கற்றுக் கொள்வது எம்முல் நேர்மையான மனித நேயத்தையும் விழுமியங்களையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டு மான்புரு மனித புனிதனாக வாழ வழிவகுக்கும். தங்கத்தந்தையுடன் ஒன்றாக ஒட்டி உறவாடி மகிழ்வாய் கழிக்கும் பொன்னான நொடிப்பொழுதுகளை இழந்துவிடாதீர்கள். அவ்வாறு இழந்தோர் பெரும் நஷ்டவாலிகளே எம்மோடு தந்தை வாழும் காலம் சொற்பமே இறுதி வரை தந்தையை பெருமைபடுத்தி நற்பிள்ளையாய் வாழ்ந்து உயர்வோம்.
"சிறந்த பிள்ளைக்கு தந்தை ஓர் தோழன் அவர் முன்மாதிரியும் முன்னோடியுமாவார்"
றிஸ்வான் சுஹைப்.