காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ட்டக்களப்பு காத்தான்குடியின் சமூக ஆர்வலர்களினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை 18.03.2017 இரவு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

அஷ்ஷஹீட் அல்ஹாஜ் ஏ அஹ்மட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் காத்தான்குடியில் டெங்கு நோய் பரவும் இடங்களை உடனடியாக கண்டறிதல், அவற்றை ஒழித்தல் மற்றும் அது தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

டெங்கு நோய் தாக்காத வண்ணம் அரச திணைக்களங்கள், வீடுகள், பொது இடங்கள், பூங்காக்கள், பாடசாலைகள், கடற்கரையோரங்கள், தோணாக்கள், வடிகான்கள் மற்றும் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் 20 பேர் கொண்ட அவசர வேலையாட்களை நகர சபையினூடாக அமுல்படுத்தல் என்றும், காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு தேவைப்பாடாகவுள்ள ஆளணிகளை தற்காலிகமாக அவசரமாக வழங்குவதென்றும் தேவைப்பாடாகவுள்ள மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்ற விடயங்களும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த செயற்பாட்டுக் குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோருடன் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம், வைத்தியர்கள், பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரி உட்பட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது மாணவியொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இது சமீப சில நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற முதலாவது டெங்கு நோய் மரணமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -