கொழும்பு நகர எல்லைக்குள் முறையாக குப்பை கூளங்களை அகற்றும் நடவடிக்கைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தை திறம்பட செயற்படுத்தும் நோக்கில் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள குப்பைக்கு கூளங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் தற்பொழுது துரிதமாக்கப்பட்டுள்ளன இத்திட்டத்தின் முன்னோடியாக அமைச்சர் பைஸர் முஸ்தபா 24 மனைத்தியாலங்களும் கொழும்பு நகர குப்பை கூளங்களை அகற்றும் பணிகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக முன் வந்துள்ளார்.
இன்று (2017.03.16) காலை இப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.