அஷ்றப் எனும் முழுஆளுமையே முஸ்லிம்களுக்கு முகவரி தந்தவனே..!

மூகப்பிரச்சினையின் பாரதூரத்தை அலட்டாத, அக்கறை இல்லாத சில கூட்டம் தலைமை என்ற போர்வையிலே அவரவரின் சுயநலங்களுக்கு ஏற்றாற்போல் அவர்களது நடப்புகளையும். திட்டங்களையும் வகுத்துக்கொள்கிறார்கள். இத்துன்பகர நிலையால் இலவு காத்த கிளியாய் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் ஆகிவிடுமோ என்பதுதான். முஸ்லிம்களின் ஏக்கமும் துக்கமுமாகும்.

இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் துடுப்பில்லாத வள்ளமாய் முஸ்லிம்கள் திண்டாடிக்கொண்டிருக்க அதை அலட்டாத தலைமைகள் அவரவர் வசதிக்காக நாள்தோறும் நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்.

இது இவ்வாறு இருக்க... விஷம் என்று; அன்று நீங்கள் விலக்கிவிட்ட விஷமம் இன்னும் வஞ்சனைகள் செய்கிறது, வக்கிரத்தின் உக்கிரத்தில் இருந்துகொண்டு அதன் பிறழ்நாவால் அக்கிரமங்கள் செய்கிறது, சுயநலத்திற்கு இற்றைவரைக்கும் மனிதத்தை விற்கிறது. மாமனிதனே! உன் சமூக உணர்வுகளை, நீ செய்த நயமான சேவைகளை -வழமைபோல் கொச்சைசெய்யப் பார்க்கிறது.

வயதாகிப் போயுமின்னும் நானென்ற அகங்காரமும், அகோர வார்த்தைப் பிரயோகமும், விகார எண்ணங்களும், மனிதமனங்களை ரணப்படுத்தி அதில் சுகம்காணும் கோரப் பண்புகளும் இதுவரைக்கும் அழியவில்லை. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கிக் கொண்டாட்டம் என்பார்கள் எரியும் வீட்டினுள்ளே பிடுங்கியது லாபமென்று; ரெண்டுபட்டு, துண்டுபட்டு எம் சமூகம் துன்புறும் இவ்வேளையிலே; இடவைக்குள் இவரின் கைகளை ஒட்டி அகப்பட்டதை சுருட்டப் பார்கின்றார் தன் கையை அதனாலே சுட்டுக்கொள்கின்றார்

தலைமைகளால் நம் சமூகம் திசைமாறித் தடுமாறி நிற்கையிலே வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் இடைநடுவே இந்த விஷமம் வேறு.

ஆண்டவனே
உண்மைகளை வெளிப்படுத்து
எம் சமூகத்தை வழிநடத்து

-அஷ்றபின் நிஜப்போராளிகள்-
முன்னாள் அமைச்சரின் அதாஉல்லாஹ் பிரத்தியோக முகநூலிருந்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -