சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள் - பரபரப்பு

சினிமா பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்- நடிகைகளின் ஆபாச படங்களும், அந்தரங்க வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் தனுஷ் ஆட்கள் தன்னை தாக்கி விட்டதாக சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் ஒரு தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. ‘எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு விட்டது. நான் யாரையும் புண்படுத்தவில்லை. வேறு யாரோ, இதை செய்து விட்டார்கள்’ என்று சுசித்ரா கூறினார். எனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது என்று அவரது கணவர் இன்னொரு விளக்கம் கொடுத்தார்.

பின்னர் சுசித்ரா அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அதே இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. ‘நான் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய கருத்துக்களை வெளியிடுகிறேன்’ என்று சுசித்ரா பெயரில் கருத்து பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியானதால் இந்த டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்தவர்களிடம் குழப்பம் நீடித்தது.

இந்த நிலையில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் திரை உலகின் முக்கிய நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்களின் கவர்ச்சி படங்கள் ஆபாச வீடியோக்கள் வெளியாகத் தொடங்கின. தனுஷ், திரிஷா, ஹன்சிகாவின் ஆபாச படங்கள் வெளியாகின. சஞ்சிதா ஷெட்டி, அனுயா ஆகியோரின் நிர்வாண படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோ காட்சிகளும் வெளிவந்தன.

இயக்குனர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் பேசும் உரையாடல் வெளியானது. மேலும், அமலாபால், பார்வதி நாயர், பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகும். சினிமா உலகின் உண்மை தோலுரித்து காட்டப்படும் என்ற வாசகமும் பதிவாகி இருக்கிறது.

இதுதவிர விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள் மது அருந்திவிட்டு ஆடிப்பாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தமன்னா, பூனம் பாஜ்வா பாடுவது போன்ற வீடியோ காட்சியும் இதில் பதிவாகி இருக்கிறது. தினமும் நள்ளிரவில் இதுபோன்ற பரபரப்பான காட்சிகள் இந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிறது.

‘எனது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி விட்டார்கள். அவர்கள்தான் இதுபோன்ற ஆபாச படங்களையும், அந்தரங்க வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்’ என்று சுசித்ரா கூறியுள்ளார். என்றாலும் இதுவரை அவர் போலீசில் புகார் செய்யவில்லை. எனவே அவர்தான் இதை செய்து வருகிறாரா? என்ற சந்தேகம் இருந்தது.

இந்த நிலையில், தனது இணைய தளத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுசித்ரா சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஏ.எம்.ரசூல்மைதீன் போலீஸ் கமி‌ஷனரிடம் பாடகி சுசித்ரா மீது புகார் செய்து இருக்கிறார். 

இப்போது, சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தை மூடி விட்டார். என்றாலும் அவர் பெயரில் டுவிட்டர் கணக்கு புதிதாக தொடங்கப்பட்டு அவற்றில் தொடர்ந்து திரை உலகினரின் ஆபாச படங்களும், அந்தரங்க வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. இதனால் எந்த நேரத்தில் தங்கள் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வருமோ என்று நடிகர்- நடிகைகள் மற்றும் திரை உலகினர் தவிப்பில் உள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -