டெங்கு தொடர்பில் அதிக கவனம் வேண்டும் - அக்கரைப்பற்று முன்னாள் முதல்வர்

நாம் நமது என்கின்ற அடிப்படையில் அவசரமாகவும் ஒருமித்த கட்டமைப்பிலும் டெங்கு நோய் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்க்கான அடிப்படைகளை ஆராய்ந்து உடனடியாக செயற்பட வேண்டும் இதுவே இன்றைய சூழலில் உயிராபத்தை தடுப்பதற்க்கான செயற்பாடாகும்.

இவ்வாறு இன்று கொழும்பில் கல்வி கற்கின்ற இளைஞர்களுடான பிரத்தியோக சந்திப்பில் அக்கரைப்பற்று முன்னாள் மாநகர முதல்வர் அ.அகமட் சகி கருத்துரைத்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் 

சூழலில் மீதும் நாம் வாழுகின்ற பகுதிகளில் மீதும் நாம் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் நீர் தேங்கி நிற்கின்ற நுளம்புகள் பெருகுகின்ற இடங்களை இல்லாதொழிக்க வேண்டும். அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் இது தொடர்பில் அதி கூடிய சிரத்தையுடன் நடந்து கொள்வதுடன் மாநகர பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் இதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.
உயிர் பெறுமதி தொடர்பில் நாம் நோய்கள் ஏற்படு முன் கவனமாக இருப்பதும் வருமுன் காப்பதும் சிறந்த செயற்பாடாகும்.

இது தொடர்பில் இளைஞர்கள் ஆகிய நாம் விளிப்புடன் செயற்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் பல்வேறுபட்ட துறைகளில் கல்வி கற்கின்ற இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -