ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மட்டக்குளிய தாருத்தக்வா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த வாரம் கொழும்பு-02 பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாபிஸ் மௌலவி எம்.இஸட்.எம். யுஸ்ரி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் (ஐ.ஐ.ஆர்) பிரதிநிதியும், கபூரியா அரபிக் கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் ஜே.எம்.இம்றான் (கபூரி) யும் கௌரவ அதிதிகளாக தாருத் தக்வாவின் அதிபர் அல்-ஹாபிஸ் எம்.ஆர்.ராஸிக் (அல்-அஷ்கரி), தாருத்தக்வா கல்வி நிலையத்தின் நிருவாகப் பணிப்பாளர் திருமதி றிஸ்னா யுஸ்ரி, ஹாரி ஏ.ரி.அப்துல் காதர் (இந்தியா), பெரிய பள்ளி பிரதம கதீப் மௌலவி தஸ்லீம் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள், பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் அதி திறமை காட்டிய மாணவர்களுக்கு விஷேட நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.