அட்டாளைச்சேனை இளைஞர் சம்மேளனத் தலைவராக சபீர் மீண்டும் தெரிவு..!

ஏ.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக யூ.எல்.எம் சபீர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனப் பொதுக்கூட்டம் நே்றறு (14) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவின் போதே சபீர் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான யூ.எல்.எம் சபீர் 3வது தடவையாகவும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களினால் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 32 இளைஞர் கழகங்களிலிருந்து சுமார் 100பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே அதிசயராஜ், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் அலி, அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ரீ.எம். ஹாறுஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

2017ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு
தலைவர் - யூ.எல்.எம் சபீர்
செயலாளர் - எம்.ரீ.எம் ஹாறூன்
பொருளாளர் - எம்.சஜீர்
அமைப்பாளர் -எஸ்.எம். முனாஸ்
உப தலைவர் - எம்.எஸ்.எம் சிபான்
உப செயலாளர் - எஸ். சியான்
உப அமைப்பாளர் - ஏ.ஜே ஹசான் அகமட்

செயற்பாட்டுக் குழு செயலாளர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்..

விளையாட்டு - யூ.எல் கஸ்ஸாலி
கலாசாரம் - ஏ.சீ.எம் அசாம்
ஊடகம் மற்றும் தகவல்துறை - எம்.ஏ.எஸ். முக்சீத்
தேசிய சேவை - இஸட். மிஸ்பான்
முயற்சியான்மை - ஏ.எல்.எம். அம்சா
கல்வி. பயிற்சி, தொழில் வழிகாட்டல் - எம்.என் சகீர்
நிதி - எம்.அய்யாஷ்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -