திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சரின் முடிவு.!

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்றூப் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றன.

அத்துடன் கிழக்கு மாகாண முப்டைகளின் தளபதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு நோயும் அதிகரித்துவரும் மரணங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு அங்கு நடைமுறைப் படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டு பல தீர்வுகளும் எட்டப்பட்டன.

இதனடிப்டையில் விரைவாக இன்றிலிருந்தே நுளம்புகளைக் கட்டுப்படுத்த புகை விசுறும் கருவிகளை இயக்க பயிற்றப்பட்டவர்களை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. அத்துடன் கழிவுகளை அகற்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பணிப்பில் 10 வைத்தியர்கள் மற்றும் கழிவகற்றும் பவுசர்களும் அத்துடன் தேவையான ஏனையவற்றையும் இன்றிலிருந்து பாவனைக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

குறித்த கூட்டத்தில் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் சகல அரச திணைக்கள முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை கூறி தீர்வுகள் குறித்து கலந்துரையாடிமை குறிப்பிடத்க்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -