கடற்கொள்ளையர்களால் இலங்கையின் எரிபொருள் தாங்கிக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

லங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அபய சமிக்ஞையைப் பிறப்பித்த குறித்த கப்பல், தனது கண்காணிப்பு அமைப்பை செயலிழக்கச் செய்திருப்பதுடன் தனது பயணத் தடத்தை சோமாலியா நோக்கித் திருப்பியிருப்பதாலுமே இந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாக கடற்கொள்ளை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வணிகக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருப்பது இதுவே முதன்முறையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறு படகுகள் பின்தொடர்வதாக நேற்று (13) குறித்த கப்பலின் கெப்டன் தகவல் தந்த சில மணி நேரங்களுக்குள் கப்பல் காணாமல் போயுள்ளது தமது சந்தேகத்தை அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -