ஏ.எம்.கீத் திருகோணமலை-
அதில் கிண்ணியாவிலேயே அதிகம் இறப்பு சம்பவித்துள்ளதாக வும் அவர் சுட்டிக்காட்டினார்
திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை வரை 2088பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 14 பேர் இறந்துள்ளனர்.
தொற்றுள்ளவர்கள் டெங்கின் தாக்கம் அதிகரித்த பின்னர் வைத்தியமனையை நாடுவதே இதற்கு காரணமாகும். இதுவரை கிண்ணியாவில் 911பேர் பாதிக்கப்ட்டநிலையில் 9பேர் இறந்தனர். அதேவேளை குறிஞ்சாக்கேணிப்பிரிவில் 109 பேர்பாதிக்கப்பட்டநிலையில் முன்று பேர் இறந்தனர்.
திருகோணமலை பிரிவில் 379பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உப்பு வெளி பொதுச்சகாதார வைத்தியபிரிவில் 266பேரும் மூதுாரில் 418பேரும் தொற்றுக்குள்ளாகிய போதும் இறப்பு டுதக்கப்பட்டுள்ளது.
குச்சவெளியில் 5பேர் இனம்காணப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். இவ்வாறு பார்கையில் மாவட்டத்தில் 13பேர் இறந்துள்ளனர்.
இவ்வாறே மட்டக்களப்பில் 900பேர்வரையில் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கல்முனை ப்பிரிவில் 700பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இறப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. திருகோணமலை கிண்ணியாப்பிரிவல் தடுப்பு நடவடிக்கைள் முடக்கிவிடப்பட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்களின் அவதானம் போதுமானதாக இல்லை. இதில் அவர்கள் பொது இடங்கள் மற்றும் அயல் இடங்களில் அவதானமாக இருந்தால் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும் மழையும் டெங்கை ஊக்குவிக்கும் வகையிலேயே பெய்து வருகின்றது.எனவும் அவர் குறிப்பிட்டார்.அதுவும் இம்மாதத்திலேயே இந்த திடிர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.