அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கல் பகுதியில் கேரளா கஞ்சா 400 கிரேமினை விற்பனைக்காக தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றுமாலை (14) இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தம்பலகாமம்.முள்ளிப்பொத்தானை பகுதியைச்சேர்ந்த ராஷரத்னம் தர்மகுலசிங்கம் (37வயது) மற்றும் மஜீத்கான் சிறி கான் (37வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது திருகோணமலை மாவட்ட நச்சுத்தன்மையற்ற போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து தேடுதலை மேற்கொண்ட போது ஒருவரிடமிருந்து 250 கிரேம் கேரளா கஞ்சாவும் மற்றைய நபரிடமிருந்து 150 கிரேம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.