கிண்ணியாவில் டெங்கை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை .!

ஆர்.ஹஸன்-
கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயரதர்ஷன யாப்பா ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை வழங்கினார்.  ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசின் விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், டெங்கு நோயினால் கிண்ணியாவில் எற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

அவர் இதன்போது, டெங்கு நோயின் தாக்கத்தால் கிண்ணியாவில் இதுவரை 14 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், 800க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், அங்குள்ள வைத்தியசாலைகளில் நிழவும் பற்றாக்குறைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். 

இந்த விடயம் தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும், வைத்தியசாலைகளில் நிழவும் பற்றாக்குறை சம்பந்தமாக ஆராய்ந்து கொழும்பிலிருந்து விசேட வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இதன் போது ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இதேவேளை, கிண்ணியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை அனர்த்தமாக பிரகடனப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கை சம்பந்தமாக, ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பாவுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 

அத்துடன், கிண்ணியாவில் ஏற்பட்டுள்ள அவசர நிலை சம்பந்தமாக அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடன் இதன்போது உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -