பணத்துக்காக சிங்களவரை முதலமைச்சராக்கி முஸ்லிம் காங்கிரசை அழிக்க எடுத்த முயற்சியை அம்பலப்படுத்திய அன்வர்

டந்த 2௦15 இல் முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினராக இருந்த சாய்ந்தமருதை சேர்ந்த ஜமீல் அவர்கள் பெருமளவு பணத்துக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் இன்னும் பல சலுகைகளுக்காகவும் மு.கா உள்ள மாகாணசபை உறுப்பினர்களை பிரித்தெடுத்து, அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைத்து அதன்பின்பு எல்லோரும் சேர்ந்து அம்பாறையை சேர்ந்த தயாகமகே என்ற சிங்களவரை முதலமைச்சர் ஆக்குவதற்கு திரைமறைவில் மேற்கொண்ட சதிமுயற்சியினை மாகாணசபை உறுப்பினர் அன்வர் அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

அண்மையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அன்வர் அவர்கள் இந்த ரகசியத்தினை வெளியிட்டார். தொடர்ந்து கூறுகையில்:

இந்த முஸ்லிம் காங்கிரசில் இருந்தால் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முடியாது, அமைச்சர் பதவியும் எனக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலையை காணவில்லை. என்னோடு வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து அமைச்சர் ரிசாத் பதியுதீனோடு இணைவோம். அதன்பின்பு நாம் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்று கூறி அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் அன்றைய மாகாணசபை உறுப்பினர் ஜமீல் என்னை அழைத்துச் சென்றார்.

அங்கே சென்றவுடன் அமைச்சர் ரிசாத்தினதும், ஜமீலினதும் திட்டங்களை கேட்டு தலை சுற்றியது. அதாவது வேண்டியளவு பனம் தருகிறேன். அத்தோடு கொழும்பில் வீடும், வாகனமும் வாங்கித்தருகிறேன். என்னோடு இணைந்து கொள்ளுங்கள் என்று ரிசாத் பதியுதீன் என்னை அழைத்தார்.

அத்துடன் ஊடகங்களின் மூலம் வீண் பழிகளை சுமத்தி ரவுப் ஹக்கீமை விரட்டிவிட்டு, முஸ்லிம் காங்கிரசை அழித்துவிட்டால் அதில் உள்ள எல்லோரும் வந்து என்னோடு இணைவார்கள். பின்பு தான் முஸ்லிம்களுக்கு தலைவராக முடியும் என்ற சதி திட்டத்தினையே தீட்டினார்கள்.

அத்துடன் எனது முன்னிலையில் கிழக்கு மாகான ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவை அமைச்சர் ரிசாத் அவர்கள் தொடர்புகொண்டு எங்களிடம் அதிகமான மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளதாகவும், நாங்களே ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அதற்காக தயாகமகே அவர்களுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

தயாகமகே முதலைமைச்சராவதுடன், ஜமீல் அமைச்சராகவும், எனக்கு சபை தவிசாளர் பதவி வழங்குவதாகவும் பேசப்பட்டது.

அதுவரைக்கும் தயாகமகே என்ற சிங்களவரைத்தான் முதலமைச்சராக இவர்கள் சிபாரிசு செய்கின்றார்கள் என்ற விடயம் எனக்கு தெரியாமல் இருந்தது.

இந்த சதித்திட்டங்களை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதுடன் தூக்கமும் வரவில்லை. அன்று நல்லிரவு 1. 45 மணிக்கு தலைவர் ஹக்கீம் அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு நடந்த விடயங்கள் அனைத்தையும் அதிகாலை நான்கு மணிவரைக்கும் விபரித்தேன்.

அடுத்தநாள் தலைவர் அவர்களை சந்தித்தேன். அவர் தொலைபேசியை அவுட்ஸ்பீக்கரில் போட்டு ஜமீலுடன் உரையாடுமாறு பணித்தார். ஜமீல் என்னுடன் உரையாடிய விடயங்களை செவிமடுத்த தலைவர் அவர்கள் அதிர்ந்து போனார்.

வேறுவழியில்லாமல் உடனடியாக ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களை தொடர்புகொண்டு விசேட விமானம் மூலம் சென்று முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்துகொள்ளுமாறு பணித்தார். உரிய ஆவணங்களுடன் சென்று முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்கள் முதலமைச்சராக சத்தியைரமானம் செய்துகொண்டார்.

நாங்கள் இரத்மலானை விமான நிலையத்தில் சென்றபோது ஜமீல் அவர்கள் தயாகமகேயுடன் அவரது விமானத்தில் வந்து இறங்குகின்ற காட்சியினை நானும், முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்களும் நேரடியாக கண்டோம்.

தனது பதவிக்காகவும், பணத்துக்காகவும் இந்நாட்டு முஸ்லிம்களின் குரலாக பலரது தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரசினை அழிப்பதற்காக இப்படியெல்லாம் பல சதித்திட்டங்களை செய்துவிட்டு, இன்று ஜமீல் அவர்கள் நல்லவர் போன்று தலைவருக்கு எதிராக என்னவெல்லாம் பொய்களை பேசித்திரிகின்றார். இவர்கள் எல்லாம் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும். என்று மாகாணசபை உறுப்பினர் அன்வர் அவர்கள் தமது உரையில் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -