கொழும்பு நகரில் திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்ட கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிறுவனமான AOS (art of short film) இவர்களின் இரண்டாவது படைப்பான ''நேர் எதிர் '' புதிய குறும்படம் வெளியாகியுள்ளது.
பிரபுவின் இயக்கத்தில் மாலங்கவின் ஒளிப்பதிவில் சஞ்சய் இசை இசையமைக்க சனாதனன், சஞ்சய் ராஜ், சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர். இக்குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது நடிகர் சனாதனனின் ஒன்பதாவது குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரசாந்த், பிரதாப், கொட்வின் லோகேஷ், கார்த்தி கார்த்திபன் , ரிப்கான் கேபி, சுபாசினி கிரிஜா ராம் ஆகியோரும் இணைந்து இப்படத்தினை உறுவாக்கியுள்ளனர். இவர்களின் இப்படைப்பானது வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.