யாழ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் வெளியீட்டு நிகழ்வு.!

யாழ்பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப்- இதழ் 07 இன் மலர் வெளியீடு 2017.03.04ம் திகதி யாழ்பல்கலைக்கழகத்தின் கைலாசதி கலையரங்கில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களும் அதிதிகளும் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டார்கள். அத்துடன் அதிதிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் சஞ்சிகையின் முதல் பிரதிகளும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1977களில் இருந்து வெளிவரும் இன்கிலாப் சிந்தனை புரட்சியாளர்களின் நீரோட்டமாகவும் இதற்கால சிந்தனைகளின் உரையாடல்களாகவும் இது இருந்து வருகின்றது என்பதனை ஒவ்வொரு வருடமும் நிருபித்து வருகின்றது. தொடர் நீரோட்டத்தின் நாற்பதாவது வருடத்தில் இன்கிலாப் 07 வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’இன ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதில் முஸ்லிம்களின் புலமைத்துவப் பங்களிப்பு 'என்ற கருத்தினை தளமாகக் கொண்டு யாழ்பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் வெளியிடப்பட்டது.
தகவல்:இறக்காமம் முவைஸ்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -