பலம்வாய்ந்த ஏ.கே.பி யை ஹிஜ்றா வெற்றி கொண்டது..!

ன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு போட்டியில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட அக்கரைப்பற்று விளையாட்டு கழகத்தை ஹிஜ்றா விளையாட்டு கழகம் வீழ்த்தி சம்பியனாக தெரிவானது. பல அணிகள் பங்கு பற்றிய போட்டியில் இறுதிப் போட்டிக்கு இவ்விரு அணிகள் தெரிவாகின.

ஆரம்பம் முதலே ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் இளம் வீரர்கள் திறமைகளை வெளிக்காட்டினர். ஹிஜ்றா அணியின் தலைவர் பிர்னாஸ் அணியை மைதானத்தில் நேர்த்தியாக வழி நடத்தினர். சிரேஷ்ட வீரர் ஹனிபா வினால் கோல் புகுத்தப்பட்டு ஹிஜ்றா 1:0 எனும் கணக்கில் வெற்றி பெற்றது. மைதானத்தில் ரசிகர் அணைவரும் ஹிஜ்றா அணிக்கே ஆதரவு வழங்கி நின்றனர். கடந்த ஆண்டின் சம்பியனாகவும் ஹிஜ்றா விளையாட்டு கழகம் தெரிவானது. ஹிஜ்றா விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகர் அக்கரைப்பற்று முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அஸ்மி அப்துல் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -