திருமணத்திற்கு சில நாட்களே : அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் காதல் ஜோடி

திருமணம் செய்வதற்கு சில நாட்களே இருந்த நிலையில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் காதல் ஜோடி ஒன்று, உந்துருளி விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பெலவத்தை கோரகதுவ பிரதேசத்தை சேர்ந்த ஜனக என்ற இளைஞரும் கும்பதுவ பிரதேசத்தை சேர்ந்த சகுரா என்ற யுவதியும் என தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி தனியார் வகுப்பொன்றுக்கு சென்று தனது காதலனுடன் மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். மீகாஹதென்ன அகலவத்தை பாதையில் கோக்கும்புர பிரதேசத்தில் எதிர் திசையில் வந்த பாரவூர்தியில் இவர்கள் பயணித்த உந்துருளி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், யுவதி நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மீகாஹதென்ன காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -