அமைச்சர் ராஜிதவுக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்..!

ஆர்.ஹஸன்-
கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த விசேட வைத்திய குழு, தாதிமார் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை கொழும்புலிருந்து அனுப்பி வைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கத்தினால் கிண்ணியாவில் இதுவரை 14க்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், 800க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் சுட்டிக்காட்டி, இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதில் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார். 

குறித்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 

கடந்த சில நாட்களாக டெங்கு நோயின் தாக்கத்தால் கிண்ணியாவில் பல மரணங்கள் சம்பவித்துள்ளன. இன்றுவரை 14 மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளதாகவும், 800க்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் இடவசதி இல்லையென்றும், சிகிச்சையளிக்க போதுமான அளவு வைத்தியர்கள், மருந்து வகைகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் இல்லையென்றும் கூறப்படுகின்றது. இதனால், டெங்கு நோய் மேலும் தீவிரமடையும் அபாய நிலை உருவாகியுள்ளது. 

எனவே, இந்த விடயம் சம்பந்தமாக சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழுவொன்றை அனுப்பி வைப்பதுடன், தேவையான மருந்து வகைகள் மற்றும் வைத்திய உபகரணங்களையும் அங்கு அனுப்பி வைக்க வேண்டும். – என அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -