யாழ் அழகுக்கலை நிலையத்தில் பெண் ஒருவருக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்.!

ழகுக்கலை நிலையத்தில் நின்ற மனைவியை அவரது கணவன் கோடாரியால் வெட்டியதால் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே இக் கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த பெண் திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் நின்ற போது திடிரென உட்புகுந்த அவரது கணவன் குறித்த பெண்ணை கோடாரியால் வெட்டி தப்பி சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் மனைவியின் தகாத உறவின் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கடந்த வருடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த பெண்ணுடன் கதிர்காமம் பகுதியில் உல்லாசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு பின்னர் பொலிஸ் திணைக்களத்தினால் இவ்விரு உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -